Skip to content

அக(ர)ம்

ஐரோப்பா கண்டத்தின் மிகப்பெரிய பனிப்பாறை – ஜாஸ்டேடால்ஸ்பிரீன்  (Jostedalsbreen, Norway)  

அம்மா, அப்பா, குரு, தெய்வம் – சின்ன வயசுல படிச்சது. அம்மா, அப்பா, குரு, பயணம் – இது என் கருத்து (தெய்வம் சேக்குறதும் சேக்காததும் உங்க விருப்பம்). வாழ்கைக்கு தேவையான பாடத்தை கத்துக்க பல வழிகள் இருக்கு – புத்தகம், அனுபவம், திரைப்படம். ஆனா சந்தோஷத்துக்கு தேவையான பாடத்தை கத்துக்கொடுக்க எனக்கு தெரிஞ்ச ஒரே பள்ளிக்கூடம் பயணம் தான்.

கல்லூரி காலத்தில மாச செலவு போக கைல இருந்த கொஞ்ச நஞ்ச காச வெச்சு எவ்வளவு சுத்த முடியுமா அவ்வளவு சுத்தினேன். இலக்கு இல்லாம பேருந்து போற போக்குல பயணம் போறது அப்போ எனக்கு பிடிச்ச விஷயம். அந்த மாதிரி ஒரு நாள் கோயம்புத்தூர் பக்கத்துல ஏதோ ஒரு கிராமத்துல இறங்கிட்டு அடுத்து பேருந்துக்கு காத்துகிட்டு இருந்த நேரத்துல முடிவு பண்ணினேன் – “வேலைக்கு சேந்ததும் எவ்வளவு சுத்த முடியுமோ அவ்வளவு சுத்தணும்”. அப்போ ஆரம்பிச்சது, இன்னும் கால் தளர்ந்து ஒரு இடத்துல ஒக்கார வேண்டிய நேரம் வரல. 

இப்படி ஊர் ஊரா சுத்தி என்ன சாதிச்சனு பல பேர் கேட்டு இருக்காங்க. எதுவும் பெருசா சாதிக்கலை ஆனா வாழ்க்கை சந்தோசமா ஓடுதுனா அதுக்கு காரணம் என் பயணங்கள் என்னை கொண்டு சேர்த்த இடங்களும், நான் பாதையில சந்திச்ச மக்களும், கத்துகிட்ட பாடங்களும் தான். இவ்வளவு பெரிய உலகத்திலே, 700 கோடி+ மக்கள்தொகைல போக வேண்டிய இடத்துக்கும், சந்திக்க வேண்டிய ஆட்களுக்கும், கத்துக்க கூடிய பாடத்துக்கும் பஞ்சமில்லை…